புல்வாமா தாக்‍குதலைப் போன்று மீண்டும் ஒரு தாக்‍குதலா? ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் சதித்திட்டம் குறித்து உளவுத்துறை எச்சரிக்‍கை

Feb 14 2020 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
புல்வாமா தாக்‍குதலைப் போன்று மீண்டும் பயங்கரத் தாக்‍குதல் நடத்த 'Ghaznavi' என்ற தீவிரவாதப் பிரிவை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு உருவாக்‍கியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள், அந்நாட்டின் ISI உளவுத்துறை ஒத்துழைப்போடு இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 14-ம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனங்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்‍குதலில் ஏராளமான வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அதேபோன்ற தாக்‍குதலை மீண்டும் நடத்த 'Ghaznavi' என்ற தீவிரவாத பிரிவினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தப் படைப்பிரிவில், லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், அல்-ஃபதார் உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த​தீவிரவாதிகள் இடம் பெற்றுள்ளதாக எச்சரிக்‍கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 27 பேர் பயிற்சி பெற்று வருவதாக உளவுத்துறை ஏற்கெனவே எச்சரித்துள்ள நிலையில், இந்த பயங்கரவாத அமைப்பின் 'Ghaznavi' பிரிவு, பாதுகாப்புப் படை மீது தாக்‍குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00