அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை எதிரொலி - குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைக்‍க நீண்ட சுவர் கட்டப்பட்டு வரும் அவலம்

Feb 14 2020 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகையின் போது, குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைக்‍க நீண்ட சுவர் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24, 25ம் தேதிகளில் இந்தியா வருகை தருகிறார். குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார். டிரம்புக்‍கு சிறப்பான வரவேற்பு அளிக்‍க மத்திய அரசு தயாராகி வருகிறது. குறிப்பாக, குஜராத்தில் சாலைகள் சீரமைக்‍கப்பட்டு, சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அஹமதாபாத் மாவட்டத்தில், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள சரணியவாஸ் குடிசைவாரிய குடியிருப்பு பகுதிகளை மறைக்கும் வகையில், 7 அடி உயரத்திற்கு, அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர் அங்கு பூச்செடிகள் வைக்‍கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடிசைகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், டிரம்பின் குஜராத் வருகையின்போது, குடிசைப்பகுதிகளை மறைக்‍கவே இந்த சுவர் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00