நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.8 சதவீதமாக வீழ்ச்சியடையும் - சர்வ‍தேச நாணய நிதியம் அறிவிப்பு

Jan 20 2020 8:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில், 4.8 சதவீதமாக குறையும் என்று ஐ.எம்.எப்., எனப்படும் சர்வ‍தேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 - 20-ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாத‌ார வளர்ச்சி விகிதம், 4.8 சதவீதமாக இருக்கும் என்றும், இது 2020ம் ஆண்டில், 5.8 சதவீதமாகவும், 2021-ம் ஆண்டில், 6.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வங்கி அல்லாத நிதித்துறையில் ஏற்பட்டுள்ள தொய்வு, கடன் வளர்ச்சியின் சரிவு, உள்நாட்டு தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், உலக பொருளாதார வளர்ச்சி விகிதமும், நடப்பாண்டு குறைவாக இருக்கும் என்றும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டில், 6 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00