தெலங்கானாவில் பள்ளி மாணவர்கள் சென்ற வேன் மீது ரயில் மோதிய விபத்து - 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Jul 24 2014 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா மாநிலத்தில் ரயில்வே கிராசிங் ஒன்றை, பள்ளிப் பேருந்து கடக்க முயன்றபோது, ரயில் மோதிய விபத்தில், மாணவ-மாணவிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் இன்று, அங்குள்ள பள்ளிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது, மசைபெட் என்ற இடத்தில் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது, அவ்வழியே வந்த பயணிகள் ரயில், பேருந்தின் மீது பயங்கரமாக மோதியதில், பேருந்து ஓட்டுநர் மற்றும் பள்ளிக் குழந்தைகள் 11 பேர் உயிரிழந்ததாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பள்ளிக் குழந்தைகள் 16 பேர் காயமடைந்துள்ளனர். ரயில் வருவது பற்றிய எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பேருந்து ஓட்டுநர் செயல்பட்டதே, இவ்விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தெலங்கானா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த பேருந்து விபத்து குறித்து, அம்மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00