ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு - டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரிய கனிமொழியின் மனுக்களை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Sep 2 2014 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி கருணாநிதி மகள் கனிமொழி, ஷாகித் பல்வா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது.

ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் தொடர்பாக, தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராஜா, கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என கருணாநிதி மகள் கனிமொழி, ஷாகித் பல்வா உள்ளிட்ட 5 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி தொடர்பான வழக்குகளுக்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரிய மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு. எச்.எல்.தாட்டு, திரு.எஸ்.ஏ.போப்டே, திரு. அபைமனோகர் சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2ஜி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கு முடியாது என தெரிவித்த நீதிபதிகள், கனிமொழி, ஷாகித் பல்வா உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00