ஏர்செல் நிறுவன பங்குகளை மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு தயாநிதிமாறன் விற்பனை செய்யவைத்த முறைகேட்டில் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் : நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தல்

Jul 30 2014 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், ஏர்செல் நிறுவன அதிபரை மிரட்டி, அந்நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வைத்த முறைகேட்டில், அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும் தொடர்புள்ளதால், அவர்கள் மீதும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

முந்தைய மத்திய காங்கிரஸ்கூட்டணி அரசில், தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, கடந்த 2004-ம் ஆண்டு ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரன், கைப்பேசி சேவைக்கான உரிமங்கள் கோரியிருந்தார். அவரை 2006 ஆம் ஆண்டு வரை அலைக்கழித்த தயாநிதிமாறன், ஒருகட்டத்தில் மிரட்டி, ஏர்செல்லின் பங்குகளை தனது நண்பரான அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்ததற்கான ஆதாரங்களை சி.பி.ஐ. கைப்பற்றியது. மேலும், அந்த மேக்ஸிஸ் நிறுவனம், 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம், தயாநிதிமாறன் அமைச்சராக இருந்த தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து 14 உரிமங்களைப் பெற்றதையும், அதற்கு பதிலாக அடுத்த மாதமே சன் நெட்வொர்க்கில் அந்நிறுவனம் 600 கோடி ரூபாய் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அதற்கடுத்த மாதமே அதனை சன் எஃப்.எம்.மில் 111 கோடி ரூபாய் முதலீடு செய்ததையும் சி.பி.ஐ. கண்டறிந்தது.

மேலும் இந்த அந்நிய மூலதன முதலீட்டுக்கு, அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் கீழ் உள்ள அந்நிய முதலீட்டு கண்காணிப்பு வாரியம் அனுமதி அளித்துள்ளதையும், அதற்கு பிரதியுபகாரமாக, ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் 94 சதவீத பங்குகள் பெற்றுள்ள Ausbridge Holdings and Investments Private Limited என்ற நிறுவனத்திற்கு 26 லட்சம் ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதையும் சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இந்த பேரம் குறித்து தயாநிதிமாறன் சகோதரர்களிடம் விசாரணை நடத்துவதுடன், ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, நாடாளுமன்ற மக்களவையில் இன்று, அ.இ.அ.தி.மு.க. குழுத் தலைவர் டாக்டர் மு. தம்பிதுரை கேட்டுக்கொண்டார். இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப முயன்றதால் ஏற்பட்ட அமளி காரணமாக, மக்களவை சபாநாயகர் திருமதி. சுமித்ரா மகாஜன் மக்களவையை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00