மகளிர் மேம்பாட்டுக்கு இந்தியா மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது - ஜப்பான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திரமோதி பேச்சு - இந்திய சமூகத்தின் அஹிம்சை கொள்கை உயர்ந்தது என்றும் பெருமிதம்

Sep 2 2014 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகளிர் மேம்பாட்டுக்கு தமது அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் திரு.நரேந்திரமோதி தெரிவித்துள்ளார். இந்திய சமுதாயத்தின் அஹிம்சை கொள்கை, வெறும் ஏட்டளவிலான அமைதி உடன்படிக்கைகளைக் காட்டிலும், சிறப்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் பயணத்தின் 4-வது நாளான இன்று பல்கலைக் கழக மாணவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தனது அமைச்சரவையில் 25 சதவீதம் பேர்பெண்கள் என சுட்டிக்காட்டினார். பெண்களின் மேம்பாட்டுக்கு தனது அரசு அளித்து வரும் முன்னுரிமையை இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த திரு.நரேந்திரமோதி, வன்முறை இந்தியாவின் கொள்கை அல்ல என்றும், ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் அஹிம்சை தத்துவம் ஊறி இருப்பதாகவும், இதைவிட வெறும் காகித ஒப்பந்தங்கள் மேலானது அல்ல என்றும் பதிலளித்தார். அமைதிக்காகவே வாழ்ந்து, பல்வேறு தியாகங்களைச் செய்த புத்தரின் நாடான இந்தியா, அமைதி கொள்கையில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருப்பதாகவும், பிரதமர் திரு.நரேந்திரமோதி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00