புனேயில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்த 40 வீடுகள் - 10க்கும் மேற்பட்டோர் பலியானதாக அச்சம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்

Jul 30 2014 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் கனமழை காரணமாக இன்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 40 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படும் நிலையில், 150-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடம் மேலாண்மை குழு ஈடுபட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள ஆம்பி கிராமத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 40 குடிசைகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் 150 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், 10க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தில் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள அம்பீகான் தாலுகாவின் பல இடங்களில், சாலை வசதி இல்லாததாலும், தொடர் மழை பெய்து வருவதாலும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியோரை உயிருடன் மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிக்கு 30 ஆம்புலன்ஸுகளும், இடிபாடுகளை அகற்றும் இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணியில் தனியார் தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00