போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் - இந்திய ராணுவம் எச்சரிக்கை

Aug 27 2014 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர், தொடர்ந்து போர் நிறுத்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எல்லை பாதுகாப்புப்படை எச்சரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கோடு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்தத்தை மீறி, இந்திய பகுதிகளில் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் படையினரை விரட்டியடித்துள்ளனர். இந்நிலையில், எல்லை பாதுகாப்புப்படை தலைவர் திரு.DK.Pathak, ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளுக்கு நேற்று நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் நேற்று இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00