நன்கொடை மற்றும் செலவு கணக்கு விவரங்களை குறித்த காலத்திற்குள் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வருமானவரி சலுகையை ரத்து செய்ய வேண்டும் - மத்திய நேரடி வரிகள் ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

Apr 17 2014 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

நன்கொடை மற்றும் செலவு கணக்கு விவரங்களை, குறித்த காலத்திற்குள் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வருமானவரி சலுகையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய நேரடி வரிகள் ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகள், தனி நபர்கள், நிறுவனங்களிடமிருந்து பெறும் நன்கொடை, நிதி பற்றிய விவரங்களை ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். நன்கொடைத் தொகை 20 ஆயிரத்திற்கு மேல் இருந்தால், அதுபற்றிய விவரத்தையும், செலவு கணக்கையும் கடந்த செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், சில கட்சிகள் இத்தகவலை அளிக்க கால தாமதம் செய்துள்ளன. இந்நிலையில், தேர்தல் ஆணையம், மத்திய நேரடி வரி ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், 12க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் நன்கொடை உட்பட செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றும், அக்கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வருமான வரி சலுகையை ரத்து செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில், மத்திய நேரடி வரிகள் ஆணையம், செலவு கணக்கை தாக்கல் செய்யாத கட்சிகளுக்கு சம்மன் அனுப்பவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00