புதிய ஹவாலா ஊழலில் சிக்கியுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் - 20க்கும் மேற்பட்ட லாக்கர்களில் பல கோடி ரூபாய் இருப்பது கண்டுபிடிப்பு

Apr 17 2014 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் ஹவாலா ஊழலில் சிக்கிய இறைச்சி ஏற்றுமதியாளருக்கும், மத்திய காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சர்கள் பல்வேறு துறைகளில் புரிந்த ஊழல்கள் அம்பலமாகியுள்ள நிலையில், தற்போது ஹவாலா விவகாரத்திலும் சிக்கியுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த பிரபல இறைச்சி ஏற்றுமதியாளரான மொய்தின் குரேஷி என்பவரது அலுவலக தொலைபேசி உரையாடலை இரு மாதங்களாக ஒட்டுக்கேட்ட வருமான வரித்துறையினர், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி குரேஷியின் அலுவலகத்தில் சோதனையை தொடங்கினர். இதில், 6 கோடி ரூபாய் ரொக்கமும், 20க்கும் மேற்பட்ட லாக்கர்களில் பெரும் தொகையும் இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த 520 மணிநேர தொலைபேசி உரையாடலில் 4 மத்திய அமைச்சர்களின் பெயர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் ஜன்பத் இல்லத்திற்கு நெருங்கிய தொடர்பு உள்ள காங்கிரஸ் பிரமுகரின் பெயரும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெரிதும் பயனடைந்த மிகப்பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பெயரும் இருப்பது தெரியவந்தது. குரேஷி தலைவராக உள்ள ஒரு அமைப்பின் துணைத் தலைவராக மத்திய அமைச்சர் R.P.N.சிங் பொறுப்பு வகிப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00