பிராட் பேண்ட் எனப்படும் அகண்ட அலைவரிசை மற்றும் Wifi ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு திட்டம் : இந்தியா விரைவில் டிஜிட்டல் மயமாகும் வகையில் நடவடிக்கை

Aug 28 2014 2:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிராட் பேண்ட் எனப்படும் அகண்ட அலைவரிசை மற்றும் Wifi ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியா விரைவில் டிஜிட்டல் மயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏழைக் குடும்பங்களுக்கு தலா இரண்டு வங்கிக் கணக்குகள் தொடங்கும் ஜன்தன் எனப்படும் "பிரதமரின் மக்கள் நிதி" திட்டத்தை தமிழகத்தில் தொடங்கி வைப்பதற்காக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் இன்று சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஜன்தன் திட்டத்தின் மூலம் ஏழை - எளிய மக்களுக்கு வங்கிக்கணக்கு மட்டுமின்றி, காப்பீட்டு வசதியும் கிடைக்கும் என்றும் கூறினார். இணையதள தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில், பிராட்பேண்ட் எனப்படும் அகண்ட அலைவரிசை மற்றும் Wifi ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம் இந்தியா விரைவில் டிஜிட்டல் மயமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, நாடுமுழுவதிலும் 76 இடங்களில் ஒரே நேரத்தில் ஜன்தன் திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் டெபிட் கார்டு மற்றும் ஒரு லட்சத்திற்கான காப்பீடு வசதி கிடைக்கும். தமிழகத்தில் இத்திட்டத்தில் 10 லட்சம் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00