3,600 கோடி ரூபாய் ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள இத்தாலி நிறுவனம், இந்தியாவில் புதிதாக கோரப்படும் டெண்டர்களில் பங்கேற்க தடை - மத்திய அரசு நடவடிக்கை

Aug 27 2014 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழலில் சிக்கியுள்ள இத்தாலி நிறுவனத்திற்கு, இந்தியாவில் புதிதாக கோரப்படும் டெண்டர்களில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில், மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக, இத்தாலி நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம், இந்திய அரசியல்வாதிகள் சிலருக்கும், பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து இந்திய விமானப்படையின் முன்னாள் தலைமைத் தளபதி தியாகி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ள சி.பி.ஐ., தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனையடுத்து, இத்தாலியின் Finmeccanica நிறுவனத்துடன், அதன் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், Finmeccanica நிறுவனத்துடன், அதன் துணை நிறுவனங்களுடன் எத்தகைய நடைமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும் என்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், Finmeccanica நிறுவனம், இந்தியாவால் எதிர்காலத்தில் கோரப்படும் டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், Finmeccanica மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு, இந்த ஒப்பந்த நீட்டிப்பு பொருந்தாது எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00