மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கு, விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் - மாதத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய சலுகை அறிவிப்பு

Aug 28 2014 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரை பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தற்போது நீக்கியுள்ளது. ஓராண்டிற்கு 12 சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் எந்தநேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின்போது, மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தேவைக்கேற்ப வாடிக்கையாளர்கள் சமையல் சிலிண்டர்களை பெற்று வந்த நிலையில், மானியத்துடன் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என முந்தைய மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் எதிரொலியாக கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி இந்த எண்ணிக்கை 12-ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும், மாதத்திற்கு ஒரு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பண்டிகை காலங்களில் கூடுதல் சிலிண்டர்கள் கிடைக்காததால், பொதுமக்கள் அதிக விலை கொடுத்து சிலிண்டர்களை வாங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மீது, முந்தைய காங்கிரஸ் அரசு விதித்த கட்டுப்பாடுகளை தற்போது மத்திய அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. ஓராண்டுக்கு 12 சிலிண்டர்கள் என்ற வரம்புக்கு உட்பட்டு, மாதத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்களை தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு தற்போது புதிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00