சுரங்க முறைகேடு தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா உள்ளிட்டோர் மீது சி.ஏ.ஜி. தெரிவித்திருந்த புகார்கள் - புதிய தகவல்களால் மீண்டும் சர்ச்சை

Aug 27 2014 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், நிலக்கரித் துறையை கவனித்து வந்த காலத்தில் முறைகேடாக சுரங்க அனுமதி வழங்கப்பட்டதாக, சி.ஏ.ஜி. தாக்கல் செய்த மேலும் ஒரு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு சுரங்க உரிமம் வழங்கியதில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங், நிலக்கரித் துறையை கவனித்து வந்த காலத்தில், முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 2012-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில், நிலக்கரி சுரங்க முறைகேடுகள் அம்பலப்படுத்தப்பட்டதை அடுத்து, அதுகுறித்த விசாரணையில் 200 ஒதுக்கீடுகளை உச்சநீதிமன்றம் தற்போது ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேலும் ஒரு சி.ஏ.ஜி. அறிக்கையில், தணிக்கைக் குழு பரிந்துரை செய்திருந்த நிறுவனங்களுக்கு உரிமம் வழங்காமல், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் மதுகோடா சிபாரிசு செய்த நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டதாகவும், இந்த முறைகேடு மன்மோகன்சிங் நிலக்கரித் துறையை கவனித்து வந்த காலத்தில் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலக்கரி ஊழலில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே 200 உரிமங்களை ரத்து செய்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவலால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00