ரஜினியின் 'முத்து', கமலின் 'ஆளவந்தான்' படங்கள் டிச. 8-ம் தேதி ரீ-ரிலீஸ் : இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகம்

Nov 28 2023 7:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஜினியின் 'முத்து', கமலின் 'ஆளவந்தான்' திரைப்படங்கள் டிசம்பர் 8-ஆம் தேதி ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் படங்கள் பலமுறை ஒரேநாளில் வெளியாகியுள்ளது. அதன்படி 1978ல் தீபாவளியன்று ரஜினியின் தப்புத் தாளங்கள், தாய் மீது சத்தியம் படங்களும், கமல்ஹாசனின் சிவப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா படங்களும் வெளியாகின. தொடர்ந்து 1987 தீபாவளியன்று மனிதன்-நாயகன், 1991-ல் தளபதி - குணா, கடைசியாக 2005ல் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் ஒருநாள் முன்பின் திரைக்கு வந்தது. இந்நிலையில் 17 வருடங்களுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ட்ரெண்டில் முத்து, ஆளவந்தான் படங்கள் டிசம்பர் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00