தொழிற்சாலைகளில் நூடுல்ஸ் எப்படி தயாரிக்‍கப்படுகிறது என்பதை விளக்‍கும் வீடியோ ட்விட்டரில் வைரல்

Jan 21 2023 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

எங்கு சென்றாலும் நூடுல்ஸ்தான் வேண்டும் என அடம்பிடிக்‍கும் குழந்தைகளுக்‍கு, அவற்றை வாங்கி கொடுக்‍கும் பெற்றோர், தொழிற்சாலையில் அவை எப்படி தயாரிக்‍கப்படுகின்றன என்பதை பார்த்தால் நிச்சயம் அதிர்ச்சிக்‍கு ஆளாவார்கள்.

வீட்டில் இருந்தாலும், உணவகங்களுக்‍கு சென்றாலும், நூடுல்சை முள்கரண்டியில் சுருட்டி, பாதி வாய்க்‍குள் செல்ல மீதியை உறிஞ்சி சாப்பிடுவதில் குழந்தைகளுக்‍கு அலாதி இன்பம். நூல் போல தொங்கும் அவற்றை, விளையாட்டுத்தனம் நிறைந்த குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. போதாக்‍குறைக்‍கு நூடுல்ஸ்-க்‍கு செய்யப்படும் விளம்பரங்கள் அனைத்தும் குழந்தைகளை குறிவைத்தே எடுக்‍கப்படுகின்றன. குழந்தைகள் எதையாவது சாப்பிட்டால் போதும் என்ற எண்ணத்தில் பெற்றோர்களும் நூடுல்சை வாங்கிக்‍கொடுத்து விடுகிறார்கள். இந்நிலையில், ட்விட்டரில் வெளியாகியுள்ள வீடியோ, பெற்றோர்களையும், நூடுல்ஸ் பிரியர்களையும் கண்டிப்பாக பாதிக்‍கும்.

தொழிற்சாலைகளில் நூடுல்ஸ் எப்படி தயாரிக்‍கப்படுகிறது என்பதை விளக்‍கம் வீடியோவில், அந்த தொழிற்சாலை இயங்கிவரும் இடமும், இயந்திரங்களும் அசுத்தமாகக் காணப்படுகின்றன. நூடுல்சுக்‍கான மாவை தயாரிக்‍கும் ஊழியர்கள், வெறும் கைகளில் அதனை பிசைகின்றனர். மேலும் மாவை தோளில் போட்டு சுமந்து செல்கின்றனர். கை, கால் என அனைத்து இடங்களிலும் படும் மாவில் இறுதியாக நூடுல்ஸ் தயாராகிறது. துளியும் சுகாதாரம் இன்றி தயாரிக்‍கப்படும் இந்த நூடுல்ஸை உட்கொள்ளும் குழந்தைகளுக்‍கு நிச்சயமாக உடல்நலக்‍கேடு ஏற்படும்.

எதைப்பார்த்தாலும் வாங்கித்தர சொல்லி கேட்பது குழந்தைகள் குணம்; ஆனால் அதை வாங்கிக்‍ கொடுக்‍கலாமா என்பதை பெற்றோரே தீர்மானிக்‍க வேண்டும். அதுவும் உணவு விஷயத்தில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கண்டிப்புடன் இருப்பது நலம் பயக்‍கும் என்பதே நிதர்சனம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00